சோலார் குறித்த சந்தேகங்கள் பதில்கள்
FAQ About Solar
1.இணைக்கப்பட்ட Grid connected (அரசின் மின்சார கம்பத்தோடு)சோலார் சிஸ்டம் என்றால் என்ன?
அரசின் மின்சார கம்பத்தோடு(GRID CONNECTED) இணைக்கப்பட்ட சோலார் அமைப்பில், சோலார் பேனலில் இருந்து உருவாக்கப்படும் DC மின்சாரம் இன்வெர்ட்டரைப் பயன்படுத்தி AC மின்சக்தியாக மாற்றப்பட்டு மின்சார கம்பகம்பத்தில் இணைக்கப்படுகிறது.ஆகவே நாம் பயன்படுத்தியது போக மீதம் உள்ள மின்சாரம் அரசின் மின்சார கிடங்கில் சேமிக்கப்படுகிறது
2.இணைக்கப்பட்ட Grid connected சோலார் அமைப்பின் முக்கிய பாகங்கள் (Parts) யாவை
- சோலார் பேனல்கள் (PV PANELS) - சோலார் பேனல்கள் சூரிய சக்தியை மின் ஆற்றலாக மாற்றுகின்றன. சிலிக்கான் சோலார் பேனல்கள் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.
- இன்வெர்ட்டர்(INVERTER) - இன்வெர்ட்டர் சோலார் பேனல்களின் டிசி மின்சாரத்தை ஏசி பவராக மாற்றுகிறது.
- மவுண்டிங் அமைப்பு(STRUCTURE) - சோலார் பேனல்களை அடுக்கி வைக்க பயன்படும் மெக்கானிக்கல் ஸ்ட்ரக்சர் அமைப்பு ஆகும்.
- இரு திசை மீட்டர்கள்(NET METER) - மின் உற்பத்தி அல்லது நுகர்வை பதிவு செய்ய மீட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. சோலார் பேனல்கள் உதவியுடன் நாம் உற்பத்தி செய்யும் மின்சாரம் மற்றும் அரசின் மின்சாரத்தை நாம் பயன்படுத்தும் அளவை அளக்க உதவும் டிஜிட்டல் மீட்டர்
- கேபிள்கள், சுவிட்ச்போர்டுகள்,சர்க்யூட் பிரேக்கர், மின்னல் பாதுகாப்பு (மின்னலினால் சோலார் பேனல்கள் காப்பாற்ற பட பயன்படும் கருவி)ஜங்ஷன் பாக்ஸ் போன்ற அமைப்புகளும் அடங்கும்
3. 1 kW சோலார் அமைக்க எவ்வளவு இடம் தேவைப்படும்?
1 KW சோலார் அமைப்புக்கு பொதுவாக 10 சதுர மீட்டர் நிழல் இல்லாத பகுதி தேவைப்படுகிறது. இருப்பினும், சோலார் தொகுதியின் செயல்திறன் மற்றும் அவற்றின் இடம் போன்றவற்றைப் பொறுத்து தேவை மாறுபடலாம்
4.சோலார் அமைக்க நிழல் இல்லாத ஏன் தேவைப்படுகிறது?
சோலார் பேனல்கள் அதிகபட்ச மின் ஆற்றலை உற்பத்தி செய்ய தடையற்ற சூரிய ஒளி தேவை. சோலார் பேனல் ன் ஒரு பகுதியில் ஏதேனும் ஒரு பகுதியில் நிழல் பட்டால் அது உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு குறையும்,நிழல் அவற்றின் ஆயுளைக் கணிசமாகக் குறைக்கிறது மற்றும் 25 ஆண்டுகளுக்கும் மேலான நிலையான வாழ்க்கைக்கு முன்பே அவை பயனற்றதாகிவிடும்.
5.Roof Top Solar (RTS) அமைப்புக்கு எந்த வகையான இடம் பொருத்தமானவை?
போதுமான சுமை தாங்கும் திறன் கொண்ட எந்த வகையான இடத்திலும் RTS அமைப்புகளை நிறுவ முடியும்.
6. 1 kW சூரிய மின் நிலையத்திலிருந்து தினசரி உற்பத்தி செய்யப்படும் யூனிட் (Unit) என்ன?
தெளிவான வெயில் நாளில், 1 KW சூரிய மின் நிலையம்(RTS) ஒரு நாளில் குறைந்த பட்சம் 4 முதல் 5.5 யூனிட்களை உற்பத்தி செய்ய முடியும். அதிக பட்சமாக 6 முதல் 7 யூனிட்களை உற்பத்தி செய்ய முடியும். இவை சோலார் பேனல்களின் தரம் மற்றும் பராமரிப்பை பொறுத்து மாறுபடும்
7.RTS இலிருந்து ஆண்டு முழுவதும் நிலையான /மின்சாரத்தை பெற இயலுமா?
இது வெப்பநிலை மற்றும் சூரிய கதிர்வீச்சைச் சார்ந்தது மற்றும் இவை ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்புகள் குறைவு ,இருப்பினும் கோடை காலங்களில் ஒரே மாதிரியான யூனிட் எளிதாக கிடைக்கும்.
8. சோலார் பேனல்களிலிருந்து மின்சாரத்தை தயாரிக்க இயலாமல் செய்யும் காரணிகள் என்ன?
- மரத்தின் நிழல் படுமாறு சோலார் பேனல்களை நிறுவுவது
- சோலார் பேனல்களின் தரம்
- குறைவான சூரிய ஒளி படுமாறு பேனல்களை அமைத்தல்
- சூரிய ஒளி குறைவாக உள்ள நாட்கள்
- பேனல்களை சுத்தம் செய்யாமல் இருத்தல்
- பராமரிப்புக்கு உட்படுத்தாமல் இருத்தல்
9.சோலார் பேனல்கள் எத்தனை வருடம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்?
நல்ல பராமரிப்பு உள்ள பேனல்கள் 25 வருடத்திற்கு குறையாமல் மின்சாரத்தை வெகு எளிதாக உற்பத்தி செய்யும்.
10.இணைக்கப்பட்ட Grid connected (அரசின் மின்சார கம்பத்தோடு) சோலாரின் நன்மைகள் என்ன?
- மின் கட்டணத்தில் கணிசமான தொகை சேமிப்பு.
- எந்த உபயோகமும் இன்றி இருக்கும் இடத்தில் சோலார் உதவியோடு மின்சாரம் தயாரிக்கலாம்.
- சோலார் அமைக்க செலவு செய்யும் தொகை அதிக பட்சமாக 4 வருடங்களில் திரும்ப பெற்றுவிடலாம்.
- குறைந்த மின்னழுத்தம்(LOW VOLTAGE) என்ற பிரச்சனை இல்லை.
- கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு.
- கண்காணிக்க வேண்டிய அவசியம் இல்லை
11. இணைக்கப்பட்ட Grid connected (அரசின் மின்சார கம்பத்தோடு)சோலார் சிஸ்டம் அமைக்க ஆகும் செலவு என்ன?
GRID CONNECTED சோலார் சிஸ்டம் அமைக்க 45,000 முதல் 55,000 வரை செலவு ஆகும். நாம் பயன்படுத்தும் பேனல் மற்றும் அமைப்பை பொறுத்து செலவு மாறுபடும்
HTTPS://SOLARROOFTOP.GOV.IN
HTTPS://SOLARROOFTOP.GOV.IN
12.இணைக்கப்பட்ட Grid connected (அரசின் மின்சார கம்பத்தோடு) சோலார் சிஸ்டம் அமைக்க அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் மானியங்கள் என்ன?
1KW லிருந்து 3KW வரை அமைக்க ஒவ்வொரு KW ற்கும் 14588 ரூபாயும் 3KW ற்கு மேல் 10KW வரை உள்ள ஒவ்வொரு KW ற்கும் 7294 ரூபாயும் மானியமாக கிடைக்கும்.
HTTPS://MNRE.GOV.IN/
HTTPS://MNRE.GOV.IN/
13.இணைக்கப்பட்ட Grid connected (அரசின் மின்சார கம்பத்தோடு)சோலார் சிஸ்டம் அமைக்க கிடைக்கும் மானியத்தை எவ்வாறு பெறுவது?
HTTPS://WWW.TNEBLTD.GOV.IN/USRP/ அரசின் இந்த வலைத்தளத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
14. யார் RTS வேலைகளை செய்து கொடுப்பார்?அரசு ஏதேனும் ஆட்களை அல்லது நிறுவங்களை இதற்காக உருவாகியுள்ளதா?
அரசு சில நிறுவனங்களுக்கு(VENDOR)வேலை செய்து தர அனுமதி வழங்கியுள்ளது. அவர்கள் மூலமாக வேலை செய்தால் மாத்திரமே மானியம் பெற முடியும். அரசின் இந்த வலைத்தளத்தில் அந்த நிறுவனத்தை எளிதாக தொடர்பு கொள்ளலாம்.
HTTPS://WWW.TNEBLTD.GOV.IN/USRP/
HTTPS://WWW.TNEBLTD.GOV.IN/USRP/
15.மாநில அரசிடமிருந்து ஏதேனும் மானியம்/ஆதரவு உள்ளதா?
மாநில மானியங்கள் குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட மின்சார விநியோக நிறுவனத்தின் இணையதளத்தில் பார்க்கலாம்.
HTTPS://WWW.TNEBLTD.GOV.IN/USRP/
HTTPS://WWW.TNEBLTD.GOV.IN/USRP/
16.மானியம் கிடைக்க எவ்வளவு காலம் ஆகும்?
மானியம் கிடைக்க தோராயமாக 4மாத காலம் ஆகும்.
17.மானியம் யாரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்?
மாநில ஆன்லைன் தளத்தின் வாயிலாக RTS அமைக்க அனுமதி பெற்றிருந்தால் அமைக்கும் நிறுவனத்தின்(VENDOR) வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். வீட்டு உரிமையாளர் மானிய தொகையை கழித்து விட்டு மீத தொகையை வழங்கினால் போதுமானது.
மத்திய ஆன்லைன் தளத்தின் வாயிலாக RTS அமைக்க அனுமதி பெற்றிருந்தால் வீட்டு உரிமையாளரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
மத்திய ஆன்லைன் தளத்தின் வாயிலாக RTS அமைக்க அனுமதி பெற்றிருந்தால் வீட்டு உரிமையாளரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
18.RTS அமைக்க இந்திய அரசாங்கம் ஏதேனும் அமைப்பை நிறுவி இருக்கிறதா?
பல்வேறு மாநிலங்களின் மின் விநியோக நிறுவனங்கள்/டிஸ்காம்கள் மூலம் திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த டிஸ்காம்கள் விகிதங்களைக் கண்டறிவதற்கும், திட்டங்களைச் செயல்படுத்த விற்பனையாளர்களை இணைப்பதற்கும் பொறுப்பாகும். இந்த டிஸ்காம்களின் இணையதளங்கள் மூலம் நுகர்வோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
HTTPS://SOLARROOFTOP.GOV.IN/
HTTPS://SOLARROOFTOP.GOV.IN/
19.RTS வழங்கும் விற்பனையாளர்களை(Vendor) நான் எப்படி மதிப்பிட வேண்டும்? கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய புள்ளிகள் என்ன?
- சோலார் சிஸ்டம் விலை.
- அமைப்பு மற்றும் கூறுகளின் உத்தரவாதங்கள்.
- ஆற்றல் உற்பத்தி மதிப்பீடுகள் மற்றும் உத்தரவாதங்கள்.
- சேவை காப்பு மற்றும் ஏற்பாடுகள்
- சிஸ்டம் செயல்திறன்
- மற்றும் விற்பனையாளரால் வழங்கப்படும் சேவை
21.மின்சார விநியோக நிறுவனத்திற்கு எவ்வாறு பணம் செலுத்துவது?
.
.
நெட் மீட்டரிங் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், நுகர்வோர் வளாகத்தில் நிறுவப்பட்ட நெட் மீட்டர் மூலம் வழங்கப்படும் ரீடிங்கின் அடிப்படையில் டிஸ்காம் பில் உருவாக்கும். நுகர்வோர் நிகர அலகுகளுக்கு (மொத்த இறக்குமதி அலகுகள் கழித்து ஏற்றுமதி செய்யப்பட்ட சூரிய அலகுகள்) மட்டுமே செலுத்த வேண்டும்
22.RTS ஐ நிறுவுவதன் மூலம் எனது மாதாந்திர மின் கட்டணத்தை 'பூஜ்யம்' செய்ய முடியுமா?
இது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் சாத்தியமாகும், ஏனெனில் நுகர்வோர் நிலையான கட்டணங்கள் போன்ற சில குறைந்தபட்ச கட்டணங்களை செலுத்த வேண்டும். நுகரப்படும் ஆற்றல் அனைத்தும் சுயமாக உருவாக்கப்பட்டாலும் கூட எவ்வாறாயினும், மாதாந்திர பில்லின் முக்கிய அங்கமான 'மின்சாரக் கட்டணங்கள்', RTS ஐ உகந்த முறையில் வடிவமைத்து பராமரிப்பதன் மூலம் பூஜ்ஜியமாகக் குறைக்கப்படலாம். உற்பத்தி செய்யப்படும் உபரி மின்சாரத்திற்கு வருவாய் தரும் மாநிலங்களில் மாதாந்திர மின்கட்டணம் பூஜ்ஜியத்திற்கு வரலாம்.
23.சோலார் அமைக்க ஏதேனும் இன்சூரன்ஸ் கிடைக்குமா ? லோன் அப்ளை செய்ய இயலுமா ?
இன்றைய சூழலில் சோலார் க்கு அனைத்து வகையான லோன் மற்றும் இன்சூரன்ஸ் கிடைக்க பெறுகிறது.உங்கள் வங்கியை தொடர்பு கொள்ளவும்.
|
குளிர் அல்லது மழை காலங்களில் solar panel, மின்சார உற்பத்தி செய்ய முடியாதா?
கோடை காலங்களை போல் வசந்த காலத்திலும் மின்சார உற்பத்தி செய்ய முடியுமா? உங்களுக்கும் அந்த சந்தேகம் இருந்தால், Energy Swaraj Foundation - ESF சார்பாக Prof. Chetan S Solanki (IIT bombay) அவர்களால் நிரூபணம் செய்யப்பட்ட Real practical experiment வீடியோ வை காணவும்.. |